பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!

Filed under: தமிழகம் |

சென்னை மாநகராட்சி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு உயர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் இருமல் தொண்டை வலி இதலி ஏதாவது ஒரு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.