பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுக்க பத்து தொலைக்காட்சிகள் ரெடி – அமைச்சர் செங்கோட்டையன்!

Filed under: தமிழகம் |

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்கு பத்து தொலைக்காட்சி தயாராக இருப்பதாக என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள தாசப்பகவுண்டன்புதூர் கிராமத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவதால் மாணவர்களுக்கு கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்தில் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு முகாம்களை அமைத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.