பழமையான மம்மியை காதலிக்கும் இளைஞர்!

Filed under: உலகம் |

இளைஞர் ஒருவர் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை காதலித்து வந்ததாக கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிப்பது என்ற நிலை மாறி தற்போது பலர் தாங்கள் வைத்திருக்கும் ஏதோ ஒரு பொருளை தீவிரமாக காதலிப்பதும், அதையே மணந்து கொள்வதுமான விசித்திர சம்பவங்கள் கூட ஆங்காங்கே நடைபெறுகிறது. சமீபத்தில் ஒருவர் ரோபோவை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அமைந்துள்ளது பெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மம்மி மீது கொண்ட காதல். பெரு நாட்டை சேர்ந்த 26 வயது இளைஞர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ. உணவு டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்த இவர் சமீபத்தில் பூங்கா ஒன்றிற்கு இறந்து பாடம் செய்யப்பட்ட மம்மி ஒன்றினை எடுத்து சென்றுள்ளார். இதை கண்டு அங்கிருந்த மக்கள் பலரும் பயந்த நிலையில், போலீசார் வந்து அந்த இளைஞரை பிடித்துள்ளனர். பெர்மேஜோவிடம் விசாரித்தபோது அந்த மம்மி தனது காதலி என அவர் கூறியது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு இடத்தில் தோண்டும்போது அந்த மம்மியை கண்டெடுத்த பெர்மேஜோவின் தந்தை அதை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அன்று முதல் அந்த மம்மியோடே பெர்மேஜோ வாழ்ந்து வந்துள்ளார். சாப்பிடும்போதும், தூங்கும்போதும் கூட அந்த மம்மியை அணைத்துக் கொண்டுதான் தூங்குவாராம்.