இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு அவரது அதிரடி திட்டங்கள் இந்திய எதிர் கட்சிகளுக்குள் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய உணர்ச்சிகள் மறுபடி ஒருங்கிணைந்து செயல்படுவதைக் கண்ட இந்திய துரோகிகள், மதவாதத்தை தூண்ட முயற்சி செய்து தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள். இதனால் கலக்கமுற்ற இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானைத் தூண்டிவிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தேவையற்ற நிலையில் பாகிஸ்தான் படைகள் நமது எல்லைகளில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதை சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இலங்கை அதிபருக்கு தங்களுடைய முழு ஆதரவைக்கொடுத்து தமிழக கடல் எல்லைகளின் முக்கிய பகுதிகளை சுட்டிக்காட்டி, தகுந்த நேரத்தில் இலங்கை மூலம் தமிழகத்தைத் தாக்கி தென் இந்தியாவை கைப்பற்ற முயற்சி நடந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து உலவுகிறது. ஜெயலலிதா மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழகத்தை அழிக்கப் புறப்படும் தமிழக அறிவாளிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் தகுந்த நேரத்தில் உதவிபுரியக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். தமிழ்குலம் அழிந்தாலும் பரவாயில்லை. ஜெயலலிதா மறுபடி தமிழக அரசியலில் தலைதூக்கக்கூடாது என்ற வக்கிர எண்ணங்களுக்கு தமிழக பா.ஜ.க. பலியானது கொடுமையானது என்று வடஇந்திய பா.ஜ.க. தலைவர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். ஜெயலலிதா இல்லை என்றால் தமிழகம் இல்லை என்ற உண்மையை தற்போது தமிழக எதிர்க்கட்சிகள் உணர்ந்து அதிர்ந்து போயுள்ளன என்ற கருத்து இந்திய அரசியல் வல்லுநர்களிடையே உலவுகிறதாம்.
ஊழல் என்பது மனிதகுல உரிமை மீறல் என்ற கருத்தை வெளியிட்டு, கர்நாடக நீதிபதிகள் தீர்ப்பளித்த விதம் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவத்தை பெற்றுள்ளதாம். ஊழல் தண்டனைக்காக காத்திருக்கும் ஊழல் அரசியல்வாதிகள் பலரது பிணைகள் தானாகவே அறுபட்டு, மறுபடி சிறைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாம். அ.தி.மு.க. தலைவியை தண்டிக்க பல கோணங்களில் முடிவு எடுத்து செயல்படுத்திய அரசியல்வாதிகள், தாங்கள் விரித்த வலையில் தாமே சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 66 கோடியில் வருமான வரி கட்டப்பட்ட கோடிகள் கணக்கில் எடுக்கப்பட்டு வரவு வைத்துக்கொள்ளும் நிகழ்வு ஏற்படுமானால் அ.தி.மு.க. தலைவியின் ஊழல் குற்றச்சாட்டு தவிடுபொடியாகும் சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு சட்ட வல்லுநர்களிடம் உள்ளது. அ.தி.மு.க. வழக்கறிஞர்களின் சட்டத்திறமை அற்ற நிர்வாக அறிவு இந்த சொதப்பலுக்கு காரணம் என்ற கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொறுப்புள்ள தமிழக அதிகாரிகள் தமிழக முதல்வரை காக்கவேண்டிய பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டதாக இந்திய நிர்வாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக முதல்வர் பதவி என்பது தமிழக மக்களின் மேன்மைக்கு அடையாளம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதல்வர் பதவி வகிக்கும் வரை அந்த பதவியில் உள்ளவர்களுக்கு நல்லது கெட்டது எடுத்து சொல்வது தமிழக அதிகாரிகளின் கடமை. அந்த கடமைக்கு ஊறு விளைவித்தவர்களை தற்போதைய முதல்வர் தண்டிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.
தமிழகத்தில் பா.ஜ.க. தற்போது தமிழக நலன்களை கையில் எடுத்து நாடகமாடத் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் உயர்வுகள் அளிக்க தமிழக பா.ஜ.க. தலைமை போராடுகிறதாம். நெய்வேலி நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தம். மத்திய அரசு தலைமை தமிழக பா.ஜ.க.விற்கு சொந்தம். அங்கு தொழிலாளர்கள் பிரச்னை ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. பாவம் தமிழக பா.ஜ.க. தலைமைக்கு யாரும் தெரிவிக்கவில்லை என்று நம்பப்படுகிறது. தமிழக அரசில் பணிபுரிபவர்கள் மட்டும் தமிழர்கள். நெய்வேலி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தமிழர்கள் அல்லர் என்ற மனப்பான்மை தமிழக பா.ஜ.க. தலைமைக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாம்.
ஜெயலலிதா இல்லாதபோது தமிழக ஆட்சியை பிடிக்கலாம் என்ற கனவுகள் தமிழக எதிர்க்கட்சிகளுக்கு வந்துள்ளதாம். ஜெயலலிதாவுக்கு பிறகு, அ.தி.மு.க.வை வழிநடத்துபவர் யார் என்ற கேள்வி மற்ற எதிர்க்கட்சிகளை தற்போது திருப்பித் தாக்குகிறதாம். காரணம் எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு கட்சிக்கும் தலைவர் யார்? என்று தடுமாறுகிறார்கள். மேலும் தமிழக பெண்குலம் அ.தி.மு.க. தலைவிக்கு ஆதரவாக எழுந்த எழுச்சி உலகத்தலைவர்களை வியக்க வைத்துள்ளது. மேலும் ஊழல் புரிந்து சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்கள் என்று கூறப்படுபவை நாளை அ.தி.மு.க. தலைவிக்குப் பிறகு அரசாங்கத்திற்குகூட போய்சேரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து உலவுகிறது. ஏனென்றால் அவருக்கு வாரிசு இல்லை. ஆனால் பல வாரிசுகள் கொண்ட தமிழகத் தலைவர்களின் ஊழல் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டால் என்ன ஆகும்? என்ற கலக்கம் எழுந்துள்ளதாம்.
ஜெயலலிதாவுக்கு எதிராக அளித்த தீர்ப்பு பல சட்டவிதிகளை பின்னிபிணைந்து சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் விதமாக புனையப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சட்ட வல்லுநர்களிடம் உள்ளதாக வதந்திகள் உலவுகின்றன. 66 கோடி என்பது உலக அளவில் பெரிய தொகையாக கணக்கிடப்பட்டு உலகத்திற்கு கணித அறிவை கற்றுக்கொடுத்த இந்திய குடிமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க. தொண்டர்கள் குமுறுகிறார்கள். பல கொலைகள் செய்தவன் மனித உரிமை மீறி இருப்பதாக நீதிபதிகள் கூறி இருக்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம். அம்மா குடிநீர், அம்மா உணவு என்று புகழ்பெற்ற அ.தி.மு.க. தலைவி அம்மா கோர்ட் என்ற புதிய வரலாற்றை படைக்க உள்ளார் என்று இந்திய மக்கள் கூறுகிறார்களாம். காரணம் சிறையில் அ.தி.மு.க. நடந்துகொண்ட விதம் அதாவது அறிவுத்திறமை கன்னட அதிகாரிகளை அதிரவைத்துள்ளது. கன்னடர் & தமிழர் ஒற்றுமை மறுபடியும் வலிமைபெறும் சரித்திரம் படைத்துள்ளதாம்.