பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

Filed under: அரசியல்,இந்தியா |

பாஜகவிலிருந்து பிரபல நடிகையான விஜயசாந்தி விலகி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை விஜயசாந்தி “தலைவாசல்” படத்தில் அறிமுகமானவர். சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தும், அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்தும் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். இவர் 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சார்பில் போட்டியிட்டு, 2009ம் ஆண்டு மெதக் தொகுதியில் போட்டியியிட்டு எம்பியானார். பின்னர், தெலங்கானா மாநிலம் தனியாக உருவான பிறகு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதன்பின், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு அதிருப்தி நிலவுவதாகவும் அதனால் அக்கட்சியிலிருந்து விலகி அவர் பாஜகவில் இணைந்தார். விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், பாரதிய ராஷ்டிரிய சமிதியிடமிருந்து தெலுங்கானா மக்களை காங்கிரஸ் தான் காப்பாற்ற வேண்டும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.