செல்போனில் இருக்கும் சீனா நாட்டின் 52 செயலிகளை தடை செய்ய உளவு அமைப்பு பரிந்துரை!

Filed under: இந்தியா |

செல்போனில் இருக்கும் சீனா நாட்டின் 52 செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உளவு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளது.

இந்தச் செயலிகள் இந்திய நாட்டிற்கு பாதுகாப்பானது இல்லை. அந்த செயலியின் மூலம் இந்தியாவை பற்றிய பல தகவல்களை எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக அமைப்புகள் கூறுகின்றன.

அதில் ஜூம் வீடியோ செயலி, டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர், xender உள்பட செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உளவு அமைப்பு அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரையை பற்றிய ஆலோசனை நடத்தப்படுகிறது எனவும் மற்றும் அந்த செயலிகள் மூலம் எவ்வகை பிரச்சனைகள் என ஒன்று ஒன்றாக பரிசோதிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், ஜூம் வீடியோ செயலி பாதுகாப்பானது இல்லை என ஏப்ரல் மாதமே உள்துறை அமைச்சகம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.