பாஜக எம்.எல்.ஏ. பதிலடி!

Filed under: அரசியல்,தமிழகம் |
பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழ்நாட்டையே இரண்டாக பிரிப்போம் என்று கூறியுள்ளார்.
நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா “எங்களை தனித்தமிழ் கேட்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்” என்றார். ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். “தமிழ்நாட்டை தனியாக கேட்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள். என்றும் தனித்தமிழ்நாடு கேட்கும் நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே பிரித்து விடுவோம்” என்ற அவரது இந்த பேச்சார் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.