பாஜக தலைவர் எச்சரிக்கை

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணைமுதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றனர்.

காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது, பிஎப்ஐ போன்று வெறுப்புணர்வை தூண்டும் பஜ்ரங் தல் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் சித்தப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இன்னும் துறை ஒதுக்கவில்லை. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “கர்நாடகாவில் அமைதியை குலைக்கவோ, மதரீதியிலான வெறுப்புணர்வை பரப்பினாலோ, மத அமைப்புகளாக இருந்தாலும், அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் அதை தடை செய்ய நமது அரசு தயங்காது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக இருந்தாலும் சரி மற்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி” என்று கூறியிருந்தார். இதற்கு கர்நாடக பாஜக தலைவர் நலின்குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர், அதில், “கர்நாடக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தால் கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து, நலின்குமார் கூறியதாவது: ‘’பஜ்ரங்தல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடைசெய்ய முயற்சித்தால், காங்கிரஸ் சாம்பலாகிவிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.