பாஜக நிர்வாகி காவல்நிலையம் முன் தீக்குளிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக நிர்வாகி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து நேராக காவல் நிலையம் சென்று திடீரென தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜகவின் அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளார். இவர் ரூபாய் 51 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சத்யராஜ் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமினில் இருந்து வெளிவந்த அவர் நேரடியாக காவல் நிலையம் சென்று அதன் முன்பு திடீரென தீக்குளித்தார். அவருக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன் மீது பொய்யான வழக்கு போட்டதாக அவர் கூறிவரும் நிலையில் தன் மீது வழக்கு போட்ட காவல் நிலையம் முன்பு தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.