பாஜக நிர்வாகி கொலை வழக்கில் ரவுடிகள் கைது!

Filed under: சென்னை |

போலீசார் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 3 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி பாலசந்தர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ரவுடிகளான பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய் மற்றும் ரவுடி கலைவாணன் உள்ளிட்ட 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.