பாலிவுட் படங்களின் தொடர் தோல்வி!

Filed under: சினிமா |

ஓசியிலே டிக்கெட் கொடுத்தாலும் படம் பார்க்க யாரும் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பால்வுட் திரைப்படங்களின் நிலை.

சமீபத்தில் இந்தியில் வெளியாகும் படங்கள் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலேயே சோடைபோகாமல் இருப்பது பாலிவுட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரியளவில் வசூல் மற்றும் புகழை பெறுபவையாக கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் படங்களே இருந்து வந்தன. முக்கியமாக பாலிவுட்டின் கான் நடிகர்களான ஷாரூக்கான், ஆமிர் கான், சல்மான் கான் ஆகியோருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் கடந்த சில காலமாக இந்த ட்ரெண்ட் அடியோடு மாறியுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து உருவாகும் படங்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் படங்களோ இந்தி பேசும் மாநிலங்களில் கூட ஹிட் அடிக்காத நிலையில் உள்ளது. தென்னிந்திய மொழிகளில் உருவான “புஷ்பா,” “ஆர்ஆர்ஆர்,” “கேஜிஎப்,” “விக்ரம்” உட்பட பல படங்கள் தேசியளவில் வசூலில் சக்கைப்போடு போட்டுள்ளன. ஆனால் இந்திய வெளியான பெரிய பட்ஜெட், ஸ்டார் நடிகர்களின் படங்களான ரக்‌ஷாபந்தன், பிரித்விராஜ், பெல்பாட்டம், பச்சன் பாண்டே என பல படங்கள் வசூலில் திணறியுள்ளன. பிரபல நடிகர் ஆமிர்கானின் “லால் சிங் சத்தா” படத்திற்கு கூட ரசிகர்கள் பலர் செல்லவில்லை. இதனால் சில திரையரங்குகள் பாலிவுட் படங்களுக்கு 3 டிக்கெட் எடுத்தால் 1 டிக்கெட் இலவசமென அறிவித்தும் கூட திரையரங்குகள் நிரம்பாததால் கலக்கத்தில் உள்ளது.