பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: சினிமா |

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரசால் மக்கள் மட்டும் மின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் அமிதாப் பட்சன் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. போனி கபூரின் இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அர்ஜூன் கபூரும் பாதிக்கப்ட்டுள்ளார்.

இந்த தகவலை அர்ஜுன் கபூர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு:

https://www.instagram.com/p/CEydxJNp3mB/?igshid=1e96qzagnygzu