“பிச்சைக்காரன்” திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியாகி பெரும் ஹிட்டானது. தற்போது 7 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகமான “பிச்சைக்காரன் 2” வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து, நடித்தும் உள்ளார்.
இத்திரைப்படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களையும், வெற்றிகரமாக வசூல் செய்தும் வருகிறது. முதல் பாகம் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் இல்லை என்றாலும், இந்த படமும் ஹிட்டானது. தமிழை விட தெலுங்கில் இந்த படம் பெரியளவில் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை 2025ம் ஆண்டு தொடங்க உள்ளதாக விஜய் ஆண்டனி அறிவித்திருந்தார். அந்த படத்தை மிக பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு வருகிறாராம்.