பிரதமரின் கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு!

Filed under: அரசியல் |

ஓபிஎஸ் மகனான ஒபி ரவீந்திரநாத் எம்பிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக மக்களவை எம்பி என்று குறிப்பிட்டு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அதிமுக எம்பி ஆக ரவீந்திரநாத்தை கருதக்கூடாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கை கடிதம் அனுப்பியது. இந்நிலையில் இன்றைய அழைப்பு கூட்டத்துக்கு அதிமுக எம்பி என ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலான அதிமுக மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.