பிரதமர் சீட் போட்டி: பின்வாங்கிய வடமாநில தலைவர்கள்!

Filed under: அரசியல்,இந்தியா |

p_5வருகின்ற பாராளுமன்ற கூட்ட தொடர் அடுத்த பொதுத்தேர்தலுக்கு வழி வகுக்கும் என்ற கருத்தும் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்காது என்ற கணிப்பும் உள்ளதாம். மேலும் முலாயம்சிங் யாதவ் அடுத்த பிரதமருக்கு தயாராக இருப்பதாக அறிக்கை விட்டிருக்கிறாராம். இதனால் காங்கிரசை ஆதரிப்பதை கைவிடவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். மேலும் தனிதெலுங்கானா மாநில மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறக்கூடும். அப்போது ஆந்திர காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதாம். கூடவே காங்கிரசுக்கு ஆதரவு தரும் கட்சிகள் எதிர்கால அரசியலை கணக்கில் கொண்டு விலகுமா? என்ற கேள்விக்குறி எழுகிறதாம்.
அடுத்த பிரதமர் போட்டியில் மாநில கட்சிகளின் தலைவர்கள் பலர் எழுந்துள்ளதால் கலக்கமடைந்த காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் குழம்பிப்போய் உள்ளார்களாம். மாநில கட்சிகளில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் முலாயம்சிங் யாதவ் மற்றும் தமிழக முதல்வரை குறிப்பிடுகிறார்கள். மேற்கு வங்க முதல்வரின் அதிகார குழப்பங்கள் இந்திய கட்சிகளை மிரள வைத்துள்ளதாக கூறுகிறார்கள். தற்போது முலாயம் சிங் யாதவ்வின் ஆங்கிலமொழி எதிர்ப்பு, இந்திய அதிகாரவர்க்கத்தை கலக்கி உள்ளதாம். காரணம் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் தகவல் மொழியாக ஆங்கிலம் தற்போது தலைநகரில் பயன்படுத்தப்படுகிறதாம்.
வடமாநில அதிகாரிகள் அதிகம் பஞ்சாபி மொழியை பேசுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் மிகவும் உதவி மொழியாக பயன்படுகிறது. தற்போது முலாயம்சிங் யாதவ் அடித்த இங்கிலிஷ் ஆப்பு, அவருக்கே தேர்தல் தோல்வியை கொடுக்கலாம் என்ற கருத்து தலைநகரில் உலவுகிறது. அடுத்தது சரத்பவாரின் மீது இடது சாரி கட்சிகளின் பார்வை பதிந்ததாம். தன்னுடைய அரசியல் எழுச்சியை உணர்ந்து கொண்ட மராட்டிய தலைவர், மெதுவாக பிரதமர் போட்டியிலிருந்து விலகிவிட்டாராம்.
ஆகமொத்தம் தற்போதைய பிரதமர் போட்டியில் 3வது அணி சார்பாக ஓங்கி உயர்ந்து நிற்பவர் தமிழக முதல்வர்தான் என்கிறார்கள். காங்கிரஸ், பா.ஜ.க.வும் நாளைய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு போட்டிபோட்டுக்கொண்டு தமிழக முதல்வரை கண்டிப்பாக ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். காரணம் நரேந்திர மோடியின் எழுச்சி, பல பா.ஜ.க. முன்னணி தலைவர்களின் எதிர்கால அரசியல் வாழ்வை குலைத்துவிடும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மோடி, நாளை பிரதமராக அமர்ந்தால், தன்னுடைய சாதியின் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் ஈடுபடும் சூழ்நிலை உண்டாகும். இது சாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய கட்சிகளுக்கு மிகப்பெரிய பிளவை உண்டாக்கலாம் என்ற உணர்வு உள்ளதாம். உதாரணமாக டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால் காங்கிரஸ் முதல்வராக பஞ்சாபியை தேர்ந்து எடுத்தாக வேண்டும் மற்ற சாதிகளின் கணக்கு செல்லாது. ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ராஜபுத்திரரை தேர்ந்து எடுக்கிறது. காரணம் அதிக ஆதரவு மற்றும் மக்கள் தொகை கொண்டவர்கள் பிற்பட்ட வகுப்புகளில் யாதவ், ஜாட், தாகூர், குர்மி, சௌகான் போன்ற இனத்தினர் அடக்கம். இந்த இனத்தினர் தற்போது முதல்வர்களாக பவனி வருகின்றனர்.
நரேந்திரமோடி இந்த பின்தங்கிய வகுப்பினரில் அடக்கம். இந்த பின்தங்கிய வகுப்பினரின் ஒருங்கிணைந்த ஆதரவு, நாளை மற்ற சாதிகள் இந்திய அரசியலில் தலைதூக்க முடியாது என்ற கசப்பான உண்மை இந்திய அரசியல்வாதிகளுக்கு புரிந்து உள்ளதாம். மதசார்பு அற்றத்தன்மை என்ற போர்வையில் தங்கள் எதிர்காலத்தை கணக்கிடும் அரசியல்வாதிகள், நாளை ஒரு வலிமையான பிரதமரை அமர்த்த மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். இதனால் அனைத்து வழிகளிலும் தற்போது முன்னணியில் இருப்பவராக தமிழக முதல்வர் தெரிகிறாராம். காரணம் இவருடைய நிர்வாகத்திறன், ஆங்கிலபுலமை, இந்தி புலமை, வடஇந்தியர்களை கவர்ந்து உள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழக முதல்வரின் அழுத்தமான தீர்க்கதரிசன முடிவுகள், நடவடிக்கைகள், எதற்கும் துணிந்த அரசியல் தன்மை, இந்திய மக்கள் மீது வைத்திருக்கும் பாசம் உலக நாட்டுத்தலைவர்களை கவர்ந்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள். மேலும் இந்தியாவை குள்ளநரித்தனத்துடன் பணியவைத்து பாகிஸ்தான், சீனா நாடுகளை தன் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் இலங்கை அதிபர் தமிழக முதல்வரைக் கண்டவுடன் காமெடி நடிகர் வடிவேலு போல ஆகிவிடுவதாக சிங்கள மக்கள் ஆவேசப்படுகிறார்களாம். இலங்கை தமிழர்களையும், இலங்கையையும் காப்பாற்ற இந்திய அரசு தனது கப்பற்படையை சற்று விரிவாக்கி, இலங்கையைச் சுற்றியுள்ள இந்திய எல்லைகளில் நிறுத்தினாலே போதுமானது என்ற கருத்து உலவுகிறது. அதற்கு தற்போது பா.ஜ.க.வும், காங்கிரசும் இலங்கை அதிபருக்கு ஆதரவாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களாம். தமிழக முதல்வர் பிரதமரானால், இலங்கையின் எதிர்காலம் காப்பாற்றப்படுவதுடன், தமிழர்களின் நலன் கண்டிப்பாக பாதுகாக்கப்பட்டு இந்திய அறிவு ஜீவிகள், சுயநல அரசியல்வாதிகள் விரும்பிய ஒருங்கிணைந்த இலங்கை தழைத்து ஓங்கும் என்பது சுட்டெரிக்கும் உண்மை.
– டெல்லி சாரி