பிரதமர் மோடியை விமர்சித்த கர்நாடக முதலமைச்சர்!

Filed under: அரசியல்,இந்தியா |

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா “இந்த அளவுக்கு பொய் பேசும் பிரதமரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பேசும் போது, “எனது நாற்பது ஆண்டு கால அரசியல் வாழ்வில் நரேந்திர மோடியை போன்று பொய் பேசும் பிரதமரை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். அனைவருக்கும் வங்கி கணக்கில் ரூ.1.5 லட்சம் செலுத்தப்படும் என்றார், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார், இதில் ஏதாவது ஒன்றாவது நடந்ததா? ஊழல் என்றால் பாரதிய ஜனதாதான். மொழி, ஜாதி மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டும்” என்று அவர் பேசியுள்ளார்.