பிரபல இயக்குனரின் டுவிட்!

Filed under: சினிமா |

பிரபல இயக்குனர் பைத்தியங்கள் மீது கருணை அவசியம். சிகிச்சை அதனினும் அவசியம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் நவீன் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்த பத்ரி சேஷாத்ரியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வருபவர் பத்ரி சேஷாத்ரி. சமீபத்தில் இவர் அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை சந்தித்துள்ளது. பத்ரி சேஷாத்ரி தமிழக அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அவரது சர்ச்சை பேச்சை தொடர்ந்து அவரை ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கி மாற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்தியளவில் பேசு பொருளான இந்த விவகாரத்தில் தற்போது, பிரபல இயக்குனர் நவீன் தன் டுவிட்டர் பக்கத்தில், “பகுத்தறிவு பெற்ற தமிழர்கள் அவரை பேரறிஞர் என்பர். மூடர்கள் இடியட் என்பர். பைத்தியங்கள் மீது கருணை அவசியம். ஆனால் சிகிச்சை அதனினும் அவசியம். #பேறிஞர்அண்ணா’’ என்று பதிவிட்டுள்ளார். இயக்குனர் நவீன் “மூடர் கூடம்,” “அக்னி சிறகுகள்” உட்பட படங்களை இயக்கி நடித்துள்ளார்.