பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றிய முக்கிய படம்!

Filed under: சினிமா |

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று இரண்டாவது பாடலான “சோழா சோழா” பாடல் ஐதராபாத்தில் ரிலீசானது. இந்நிலையில் படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய்யின் “வாரிசு” மற்றும் ஷங்கர் இயக்கும் புதிய படம் ஆகியவற்றை தயாரித்து வருபவர்.