பிரபல நடிகரின் ரூ.100 கோடி வீடு பரிசு?

Filed under: சினிமா |

தனது காதலிக்காக பிரபல நடிகர் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா ஒன்றை பரிசாக கொடுத்ததற்காக அவரே விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தற்போது அவர் நடிகையும் பாடகியுமான சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையிலுள்ள முக்கிய பகுதிகளில் உள்ள பங்களா வீட்டை நூறு கோடி ரூபாய்க்கு வாங்கி தனது காதலி சபா ஆசாத்துக்கு ஹிருத்திக் ரோஷன் பரிசாக வழங்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில், “இந்த தகவலில் உண்மை இல்லை. பிரபலங்களை பற்றி வதந்திகள் பரவுவது வழக்கமான ஒன்றுதான் என்று எனக்கு தெரியும். தயவு செய்து இந்த தகவலை யாரும் பகிர வேண்டாம்” என்று ஹிருத்திக் ரோஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.