பிரபல நடிகரின் வேண்டுகோள்!

Filed under: சினிமா |

தன்னை பான் இந்திய நடிகர் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ஹிந்தியில் மற்றும் அவர் மும்பைகார், மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், “என்னை ஒரு நடிகர் என்று மட்டும் கூறினால் போதும், பான் இந்திய நடிகர் என்று கூறுவது எனக்கு வசதியாக இல்லை, மாறாக எனக்கு மிகவும் அழுத்தமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய தன்னடக்கத்தை அவருடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.