பிரபல நடிகர் எடுத்த முடிவு!

Filed under: சினிமா |

விஜய்தேவரகொண்டா நடிப்பில், பூரி ஜெகந் நாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் “லைகர்” திரைப்படம் சுமார் 160 கோடி ரூபாயில் தயாரானது.

இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்க்கப்பட்ட அளவில்லாமல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சினிமா விமர்சகர்களும் இப்படடத்திற்கு இதையே கூறி வருகின்றனர். ஆனால், விஜய்தேவரகொண்டா கடுமையாக உழைத்துப் படத்தில் நடித்திருப்பதாகப் பாராட்டி வருகின்றனர். நேற்றுதான் இப்படம் ரிலீஸான நிலையில் கர்நாடகாவில் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களில் 17% பார்வையாளர்கள்தான் வந்துள்ளனர். அதேபோல், மற்ற இடங்களில் இப்படத்திற்கு பார்வையாளர் அதிகளவில் வரவில்லை என்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. விஜய் தேவரகொண்டா இப்படம் சரியாகப் போகவில்லை என்பதல், சோகத்தில் இருந்ததாகவும், அவர் இரவு முழுவதும் மது அருந்திக்கொண்டு, அறையைப் பூட்டியதாகவும், அவரது நெருக்கமான பாலிவுட் இயக்குனர், கரண் ஜோகரின் எண்ணையும் பிளாக் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. “லைகர்” திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் உலகளவில் ரூ.33.12 கோடி ரூபாய் வசூலீட்டியுள்ளது.