பிரபல நிறுவனம் பவுடர் விற்பனையை நிறுத்துகிறதா?

Filed under: இந்தியா,உலகம் |

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


ஜான்சன் அண்ட் ஜான்சன் கடந்த பல ஆண்டுகளாக நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்தப் பவுடரில் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சந்தித்து வருகிறது. டால்கம் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை 2023ம் ஆண்டிலிருந்து நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. எங்களுடைய குழந்தைகளுக்கான அனைத்து டால்கம் பவுடரை இனிமேல் சோளமாவு பவுடராக மாற்றப் போவதாக அந்த பவுடர் வகை மிகவும் பாதுகாப்பானது என்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.