மீண்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

Filed under: உலகம் |

கொரோனா வைரஸ் சமயத்தில் ஆன்லைன் வியாபாரங்கள் பல மடங்கு அதிகரித்த நிலையில், தற்போது மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனையாளரான அமேசான் நிறுவனம், 8 லட்சத்து 76 ஆயிரம் தொழிலாளர்களுடன் சென்ற ஆண்டு 40 சதவீத வருவாய் அதிகரிப்பு மற்றும் 26 வருட வரலாற்றில் பெரும் இலாபத்தை அடைந்துள்ளது.

https://twitter.com/Reuters/status/1305451222527213568

தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிதாக 100 குடோன்கள் மற்றும் செயல்பாட்டு தளங்கள் திறக்கப்பட இருக்கிறது. இதனால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.