பிரபல பாடல் ஆசிரியர் வெளியிட்ட தகவல்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என்பது பற்றிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீடு பற்றியும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஜிப்ரான் இசையில் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் “பட்டத்து அரசன்” படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாடல் ஆசிரியர் விவேகா “துணிவு” படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன் என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே “துணிவு” படத்தில் வைசாக் ஒரு பாடலை எழுதியுள்ளார்.