அக்சராஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியது!

Filed under: சினிமா |

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது “அக்னி சிறகுகள்” என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அக்சராஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. “டிரண்ட் லவுட்” என்கிற நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அக்சராஹாசன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு பாட்டியாக பாடகி உஷா உதுப் நடிப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அக்சராஹாசன் நடிக்க உள்ள படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார்.