பிரஷாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் அரசியல் திட்டம்…

Filed under: Uncategory,அரசியல்,தமிழகம் |

பிரசாந்த் கிஷோர் வழியில் ரஜினியின் பக்கா திட்டம் எங்க. அடிக்கணுமோ சரியா அங்க அடித்திருக்கிறார்.

ரஜினி கட்சி தொடங்குவார், தொடங்கமாட்டார் என பல்வேறு விவாதங்கள் பொது தளங்களில் தொடர்ந்து விவாத பொருளாக இருந்து வந்தது ரஜினி கட்சி தொடங்கவே மாட்டார் என ஒரு தரப்பும், ரஜினி கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர்.

இந்நிலையில் ரஜினி தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும், வருகிற டிசம்பர் 31 ம் தேதி கட்சியின் பெயர் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் ஜனவரியில் கட்சி பணியை தொடங்குவேன் என அறிவித்து தமிழக அரசியல் களத்தை மாற்றியுள்ளார் . குறிப்பாக ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என எதிர்பார்த்து இருந்த ஒரு தரப்பிற்கு ரஜினியின் அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அறிக்கை வெளியிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தனது பயணம் தமிழக மக்களுக்கானது தனது வெற்றி தமிழக மக்களுடையது எனவும் அவர் குறிப்பிட்டார் அதன் பிறகு ரஜினி தனது கட்சியின் மேற்பார்வையாளராக மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியனை நியமித்துள்ளதாகவும், தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவரை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழருவி மணியன் தமிழகத்தின் மூத்த அரசியல் வாதி என்பதும் காந்திய சிந்தனைவாதி என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று இந்நிலையில் யார் இந்த அர்ஜுனா மூர்த்தி என்ற கேள்வி எழுந்த போது, இவர் மாநில பாஜக அறிவுசார் பிரிவின் தலைவராக பதவி வகித்தவர் என்பதும், அக்கட்சியின் முக்கிய நபர்களில் ஊடக வெளிச்சம் இல்லாமல் பணியாற்றியவர் என்பதும் இதற்கு முன்னர் முரசொலி மாறனுடன் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நண்பராக இருந்துள்ளார் .

இவரை ரஜினி தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ரஜினி இந்த முறை ஓசூர் பகுதியில் போட்டியிட இருப்பதாகவும் இவர் அந்த பகுதி பற்றிய அனைத்து தரவுகளையும் கொண்டுள்ளது ஒரு காரணம் எனவும் மற்றொன்று சமூகம் வலைத்தளங்களில் அரசியல் விவாதங்கள் வியூகங்கள் வகுப்பதி அர்ஜுனா மூர்த்தி திறமையானவர் எனவும் அதனால் அவரை ரஜினி தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அர்ஜுனா மூர்த்தி பாஜகவை சேர்ந்தவர் என்ற விமர்சனம் எழுந்த போது தற்போது திமுக வியூகம் வகுக்கும் பொறுப்பில் இருக்கும் பிரசாந்த் கிஷோர் ஒருகாலத்தில் பாஜகவிற்கு பணியாற்றியவர் தற்போது அவர் திமுகவிற்கு வேலை செய்யவில்லையா அதே போன்ற ஒரு கணக்கு வைத்துதான் ரஜினி அர்ஜுனா மூர்த்தியை தனது கட்சியில் இணைத்துள்ளதாகவும் விரைவில் திமுகவிற்கு எதிராக ரஜினியின் அரசியல் பிரவேசம் கிராமங்கள் அளவில் இருக்கும் எனவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.

திமுக பாஜக என இரண்டு தரப்பிலும் நட்பு வட்டாரத்தை கொண்ட அர்ஜுனா மூர்த்தி அடிமட்ட அரசியலை சிறுவயதிலேயே பார்த்தவர் என்பதும் சமூக வலைத்தளங்களை கையாளுவதிலும் சிறந்தவர் என்பதால் திமுகவிற்கும் அதன் வியூகம் வகுக்கும் அமைப்பிற்கும் மிக பெரிய அளவில் சவாலாக இருக்கும் என்பதால் ரஜினி அர்ஜுனா மூர்த்தியை தேர்வு செய்துள்ளதாகவும் திராவிட அரசியல்வாதிகளை எங்கு அடிக்க வேண்டுமோ ரஜினி அங்கு சரியாக அடித்துள்ளார் என அவரது ஆதரவாளர்கள் பாராட்டி வருகின்றனர்.