“பீஸ்ட்” படத்தின் 2ம் பாகமா?

Filed under: சினிமா |

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “பீஸ்ட்”. இத்திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

 

ரூ.150க்கும் கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 13ம் தேதி ரிலீனாது. இந்நிலையில், “பீஸ்ட்” திரைப்படத்தின் 2 வது பாகம் எடுக்க வாய்ப்புள்ளதாக இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார், மேலும், இப்படம் 2வது பாகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் எனவும், அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து பின்னர் முடிவெடுக்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.