புதிய மின் கட்டணம் அமல்!

Filed under: தமிழகம் |

இன்று முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 முதல்- 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட உள்ளது. அதே போல இரண்டு மாதங்களில் 501 முதல் -600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்தப்பட உள்ளது. இரண்டு மாதங்களில் 601 முதல்- 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்தப்பட உள்ளது. பொதுமக்கள் மத்தியில் கூடுதலான பொருளாதார சுமையை கொடுக்கவிருக்கும் இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரவிருக்கிறது.