புதிய மெகாவாட் சூரிய மின்சாரம்; அமைச்சர் தகவல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் செந்தில் பாலாஜி சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்சார வாரியம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு உலகம் முழுதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் சூரிய மின்சார தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் அதில் 6000 மெகா வாட் சூரிய மின்சாரத்தை மின்சார வாரியம் சொந்தமாக உற்பத்தி செய்யும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சூரிய மின் உற்பத்தியில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் அதிகபட்ச உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சூரிய மின்சாரத்தை மின்சார வாரியம் அதிகம் தயாரித்தால் மின்கட்டணம் குறைக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.