பூஜை விடுமுறை நாட்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

Filed under: தமிழகம் |

சென்னையிலிருந்து தொடர் விடுமுறை நாட்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப் போவதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை ஆகியவை காரணமாக அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி அரசு விடுமுறை வருவதால் மூன்றாம் தேதி மட்டும் விடுமுறை போட்டால் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் 2100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரை 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் 30-ம் தேதி முதலே பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.