பெண்களால் மூடப்பட்ட டாஸ்மாக்

Filed under: தமிழகம் |

பெண்களாக சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 3 வது டாஸ்மாக் கடையை அமைக்கும் பணி நடந்து வந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை இழுத்து மூடினர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.