பெண் அதிகாரி வெட்டு!

Filed under: தமிழகம் |

அரசு பெண் அதிகாரி ஒருவரை இளநிலை உதவியாளரே அரிவாளால் வெட்டியுள்ளார்.

தேனியில் பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ராஜராஜேஸ்வரி (வயது 50) திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இளநிலை உதவியாளராக உமாசங்கர் (40) என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இன்று பகல் 1.30 மணியளவில் திட்ட அலுவலகத்துக்கு வந்துள்ளார் உமாசங்கர். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ராஜராஜேஸ்வரியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு ராஜராஜேஸ்வரியை உமாசங்கர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து உமாசங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.