பெரிய பதவி வேண்டாம்!

Filed under: அரசியல்,இந்தியா |

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனக்கு பெரிய பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்சியின் மீது மட்டும்தான் எனக்கு ஆர்வம். எனக்குப் பெரிய பதவி எதுவும் வேண்டாமென முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஒரு தனியார் டிவி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, “மத்திய அரசு மஹாராஷ்டிராவில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. தற்போது அரசு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. அடுத்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெளியேற்றுவார்கள். எனக்கு பெரிய பதவி எதுவும் வேண்டாம், எனக்கு தேசத்தின் வளர்ச்சியின் மீதுதான் ஆர்வமுள்ளது” என கூறியுள்ளார்.