“பொன்னியின் செல்வன்” டிரையிலர்!

Filed under: சினிமா |

சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படமான “பொன்னியின் செல்வன்” படத்தின் டிரெயிலர் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்”ல் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் டிரையிலர் விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யாராய் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். சற்று முன் படத்தின் டிரையிலர் இரவு 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரையிலரை மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.