போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

Filed under: சென்னை |

சென்னை போக்குவரத்து காவல் துறை கடந்த 50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பதிவில், “வரலாறு காணாத வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கடந்த 50 நாட்களில், ரூ. 6,50,22,770 அபராதம் வசூல். ரூ.1,19,12,000- அபராதம் 1181 நபர்களிடமிருந்து குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வசூல். 274 முறை ஒரே வாகனம் அதிகபட்ச விதிமீறல். முழு அபராதமும் வசூல். 67 வாகனங்கள் 100க்கும் மேற்பட்ட முறை போக்குவரத்து விதிமீறல். முழு அபராதமும் வசூல். 12 காவல் அழைப்பு மையங்களின் சிறப்பான செயல்பாடு.” என்று பதிவிட்டுள்ளது.