போடியில் மான் வேட்டை !

Filed under: தமிழகம் |

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அரிய வகை விலங்குகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இப்பகுதியில் அடிக்கடி சட்ட விரோதமாக விலங்குகளை வேட்டையாடுதல் நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து தேனி வனச்சரக வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் சட்ட விரோதமாக வேட்டையாடுவர்களை பற்றி விவரங்கள் சேகரித்து வந்தனர்.

இந்த சூழலில் இன்று அதிகாலை போடி அருகில் உள்ள உலக்குருட்டி சாலை பகுதியில் வெடி சத்தம் கேட்டு அங்கு விரைந்து சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்த பொழுது அங்கு சுமார் 150 கிலோ எடையுள்ள மண் வேட்டையாடப்பட்டு 40 கிலோ மதிப்பிலான மானுடைய இறைச்சி பிடிப்பட்டது. மான் வேட்டையாடியதாக கருதப்படும் நான்கு நபர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்ததில் போடியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், சிவகுமார் ஆகியோர் பிடிபட்டனர். மருதுபாண்டி மற்றும் சீனிவாசன் என்பவர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட இருவரிடம் இருந்தும் மான் வேட்டையாடுவதற்கும் வெட்டுவதற்கும் பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.