போலீசார் துப்பாக்கிச் சூடு!

Filed under: உலகம் |

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர்.

போலீசார் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரியோவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பிரெசில் நாடான ரிலோ டி ஜெனிரியோவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கடத்தல் கும்பல் பதுங்கியிருந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலிசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடத்தல் கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். இதில், கடத்தல்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.