மகன் மீது காதல் தந்தையுடன் ஓட்டம்!

Filed under: இந்தியா |

இளைஞரை காதலித்து வந்த இளம்பெண் இளைஞரின் தந்தையுடன் ஓடிப்போன சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த கமலேஷ்குமாரின் மகன் அமித்(20). இவர்கள் இருவரும் கான்பூரில் உள்ள கட்டிட தொழிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, ஒரு இளம்பெண்ணுடன் அமித்திற்குப் பழக்கம் ஏற்பட்டு காதல் உண்டானது. இளம்பெண் அடிக்கடி அமித்தின் வீட்டிற்குச் சென்றபோது, அமித்தின் தந்தை கமலேஷ்குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு முதல் இளம்பெண்ணும், கமலேஷையும் காணவில்லை. இதையடுத்து அப்பெண்ணின் சகோதரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரையும் கண்டுபிடித்து கைது செய்தனர். கமலேஷ், இளம்பெண் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், காதலித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கமலேஷுக்கு போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இளம்பெண் அவருடன்தான் வாழவிரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.