தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ஆறாயிரத்திலிருந்து பதினெட்டாயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவிப்பு செய்துள்ளார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்கள் தங்களது நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர்.