மகப்பேறு விடுமுறை ஆணுக்கும் உண்டு!

Filed under: உலகம் |

சிக்கிம் மாநில முதலமைச்சர் மகப்பேறு விடுமுறை ஆண்களுக்கும் உண்டு என்றும் ஒரு மாதம் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் அரசு ஊழியராக பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறுப்பை ஒரு வருடத்திற்கு நீடித்து அம்மாநில முதலமைச்சர் பிரேம் சிங் உத்தரவிட்டுள்ளார். அரசு பெண் ஊழியர்கள் முதலமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். மகப்பேறு விடுமுறை எடுக்கும் பெண் ஊழியர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் அந்த பெண்களின் கணவருக்கும் ஒரு மாதம் விடுமுறை வழங்க உள்ளதாகவும் சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் அறிவித்துள்ளார்.