முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி இடம்பெற வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், “மக்களின் உணர்வுகளை மதியுங்கள்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி (தயிர்), கர்நாடகத்தில் தஹி (மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் மீண்டும் மத்திய அரசு இந்தி திணிப்பை தொடங்கியுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்!’’ என்று பதிவிட்டுள்ளார்.