கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி சிவமூர்த்தி முருகன் மீது இரண்டு மாணவிகள் பாலியல் புகாரளித்திருந்தனர். இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி அதற்கு அனுமதி கொடுத்தார். மடாதிபதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்றும் மடாதிபதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அதனை காரணம் காட்டி ஜாமீன் வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.