மத்திய அமைச்சர் ஆன்லைன் சூதாட்டத்திற்கான கருத்து!

Filed under: அரசியல்,இந்தியா |

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை அடக்குறதுதான் நல்லது என்று பேசியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் கடந்த சில காலமாக மக்கள் பலர் பணத்தை இழப்பதும், அதனால் கடன் தொல்லைக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர் கதையாகி உள்ளது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியானதாக இருக்கும். இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டியபிறகு ஆன்லைன் சூதாட்டத்தை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்” என கூறியுள்ளார்.