தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளைகள்; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Filed under: இந்தியா |

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சென்னை உள்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ கிளை அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொச்சி உள்பட ஒன்பது இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய நகரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளைகள் அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது

இதை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ட்டமையை வலிமையாக்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவிரவாத தொடர்பான வழக்கு மற்றும் மற்ற தேசிய பாதுகாப்பு வழக்குகளுக்கு முக்கிய தகவல்களையும் மற்றும் சான்றுகளை விரைவில்பெறவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.