மத்திய அரசை விமர்சித்த தெலுங்கானா முதலமைச்சர்!

Filed under: அரசியல்,இந்தியா |

தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்திய அரசை “மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தெலுங்கானாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் நடந்த பேரணியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் ஜோக் இன் இந்தியா திட்டம்தான். காங்கிரஸ் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது, பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்தது மொத்தத்தில் இந்தியாவை 75 ஆண்டுகளில் 70 ஆண்டுகள் இந்த இரு கட்சிகளை ஆட்சி செய்துள்ளன. இதனால் தான் நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா பிரச்சாரம் ஒன்றும் சாதிக்கவில்லை, சீன பொருள்கள் தான் இந்தியாவில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. மேக் இன் தி இந்தியா திட்டம் வெற்றி பெற்று இருந்தால் ஒவ்வொரு ஊரிலும் சைனா பஜார் எப்படி இருக்கும்” என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.