சுசாந்துக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் – சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டு!

Filed under: இந்தியா |

பாலிவுட் சுஷாந்த் சிங் ராஜ்புதை அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இதை பற்றி அவர் வெளியிட்ட வீடியோவில், என்னுடைய மகனுக்கு ரியா சக்ரபோர்த்தி தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் அளித்து கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனால் சுஷாந்தின் மரண வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரியாவையும் அவருக்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், பணமோசடி செய்தாக எழுந்த புகாரை பற்றி அமலாக்கத்துறையும், ரியா போதைபொருள் உபயோகப்படுத்தியதாக எழுந்த புகாரை பற்றி போதைபொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.