மனம் விட்டு பேச நண்பருடன் ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண் பிறகு நடந்த கொடூரம்!!

Filed under: இந்தியா |

மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காக ‘ஆன்லைன் டேட்டிங்’ நட்பில் சிக்கிய பெண் புனேவில் ஒரு ஓட்டலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தியாவில் ‘ஆன்லைன் டேட்டிங்’ போக்கு அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக எல்லாமே ஆன்லைன் மயமானது. வீட்டில் இருந்தே பணி, கற்றல், நண்பர்களை சந்தித்தல் ேபான்றவை ஆன்லைனில் அதிகரித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில், மனம் விட்டு யாரிடமானது பேச ேவண்டும் என்று நினைத்து சிலர் ‘ஆன்லைன் டேட்டிங்’ முறையை பின்பற்றுகின்றனர். தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை உண்டாக்கலாம் என்பதால், ‘ஆன்லைன் டேட்டிங்’கை தேர்வு செய்கின்றனர்.

ஆனால், சில இளம் ஜோடிகள் ‘ஆன்லைன் டேட்டிங்’ முறையை பயன்படுத்தி தங்களது வாழ்வை சீரழித்துக் கொள்ளும் சம்பவங்களும், இருவரும் உடன்பட்டு நடக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு பெண்ணுக்கு (22), ‘ஆன்லைன் டேட்டிங் டிண்டர் ஆப்’ மூலம் ஒருவரிடம் நட்பு கிடைத்தது. அந்த நபர், கடந்த 26ம் தேதி புனேவின் ஹின்ஜெவாடியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்திக்க அழைப்பு விடுத்தார். அந்த பெண்ணும் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றார். அந்த பெண்ணை மது அருந்துமாறு அந்த வாலிபர் கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரை அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் பிம்ப்ரி சின்ச்வாட் போலீசில் புகார் அளித்தார். அதில், ‘குற்றம் சாட்டப்பட்டவர் ெபயர் அபிஜீத் வாக் (26). எனது அனுமதியின்றி என்னிடம் நெருங்க முயற்சித்தார். அவரை மகிழ்விக்க மறுத்தபோது, அவர் என்னை தாக்கினார். என்னை உதைத்து, அவரது காலணிகளால் அடித்தார். பின்னர் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த சம்பவம் கடந்த 26ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடந்தது’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அபிஜித் வாக்கை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் ஜனவரி 2ம் தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.