மீண்டும் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறால்; சரியான பதிலடி அளித்த இந்திய ராணுவம்!

Filed under: இந்தியா |

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் செய்ததிற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை அளித்துள்ளது.

காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. அந்த தாக்குதலில் சிறிய ஆயுதங்கள், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று காலையும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை துவங்கியுள்ளது. இதனைக் கண்ட இந்தியா ராணுவம் சரியான பதிலடி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.