தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து மனைவியிடம் வரதட்சணை கேட்ட போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குருகுலபேட்டையில் இருப்பவர் சுகுமார்(28). இவர் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாப்பர்ஸ் விஷ்ணுபிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சுகுமார் தந்தை தேவரா மற்றும் தாயார் குருவராணி ஆகியோர் ஜாப்பர்ஸிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு விஷ்ணு பிரியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் சுகுமார் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை விஷ்ணுபிரியா நெற்றிப்பொட்டில் வைத்து, வரதட்சணை வாங்கிக்கொண்டு வரவில்லை என்றால் சுட்டுவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். விஷ்ணு பிரியா தன் தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார். விஷ்ணுபிரியாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, சுகுமார் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவர்களைத் தேடும் பணியில் உள்ளனர்.