மம்தா போட்ட ஆர்டர்!

Filed under: அரசியல் |

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாங்கள் அனைவரும் குத்தகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை எடுத்துசென்று இடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது மம்தா பானர்ஜியின் உறவினர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருப்பதாக கூறி இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக ஆதரவாளரும் வழக்கறிஞருமான தருண்ஜோதி திவாரி பொதுநல வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார்.

2011ம் ஆண்டு மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதலமைச்சரான பிறகு அவரது உறவினர்கள், சகோதர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மம்தாவின் சகோதர் சமிர் பானர்ஜியின் மனைவி கஜாரி பானர்ஜி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் பொதுப்பணியாளர் என்பதால் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மம்தா பானர்ஜி வசித்து வரும் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விளக்கமளித்த மம்தா பானர்ஜி, “சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட நிலத்தை நான் வைத்துள்ளதாக ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நாங்கள் ராணி ராஷ்மோனி பகுயில் வசித்து வருகிறோம். நாங்கள் குத்தகைக்கு எடுத்து வீட்டில் வசித்து வருகிறோம். இன்றைய கூட்டத்தில் தலைமை செயலாளரிடம் அந்த இடம் குறித்து விசாரிக்கவும், புல்டோசரை கொண்டு சென்று வீட்டை இடிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.